சினிமாசெய்திகள்

படப்பிடிப்பிற்காக இன்று இலங்கை வந்துள்ள பிரபல இந்திய நடிகர் மோகன்லால்!

பிரபல இந்திய நடிகர் மோகன்லால் விஸ்வநாதனும் மற்றொரு இந்திய நடிகரான குஞ்சாக்கோ பாபனும் படப்பிடிப்பிற்காக இன்று இலங்கை வந்துள்ளனர்.

பேட்ரியோட் ( Patriot) என்ற படத்தின் 3 நாட்கள் படபிடிப்பிற்காக குறித்த நடிகர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் 08 மொழிகளில் (Pan India) இந்த படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் கொச்சி நகரில் இருந்து இன்று (15) முற்பகல் 11.20 அளவில் சிறிலங்கள் விமான சேவைக்கு சொந்தமான UL-166 விமானம் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts

கொழும்பு உட்பட்ட 5 உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலுக்கு இடைக்காலத் தடை..!

Maash

சுமார் 200 இடங்களில் தேடியும் கிடைக்காத செவ்வந்தி, இந்தியாவுக்கு தப்பி சென்றிருக்கலாம்..!

Maash

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து நால்வர் தப்பியோட்டம்

Maash