பசிலின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ரணில் சூழ்ச்சி

21ஆவது திருத்தச் சட்டத்தை கட்சித் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முயற்சிகளை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பான கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று பிற்பகலில் பிரதமர் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதன்படி, இந்த திருத்தச்சட்டத்தில், ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதுடன் இரட்டைக் குடியுரிமையையும் நீக்கும் வகையிலான முயற்சியே மேற்கொள்ளப்படவுள்ளது.

இது, நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்சவின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares