அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

நேற்றுவரை 25 வேட்பாளர்கள் கைது .

தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த மார்ச் 3 ஆம் திகதி முதல், நேற்று (24) ம் திகதி வரையில் கைது செய்யப்பட்ட மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது .

நேற்றைய முன் தினம் மாத்திரம் 6 ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது கைது செய்யப்பட்ட மொத்த ஆதரவாளர்களின் எண்ணிக்கை 98ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய நாளில் மாத்திரம் தேர்தல் தொடர்பான 3 குற்றவியல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பெறப்பட்ட மொத்த குற்றவியல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 61 ஆகும். தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக நேற்று 20 முறைப்பாடுகள் கிடைத்ததோடுஇ மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, கடந்த மார்ச் 3 ஆம் திகதி முதல் இன்று வரையான காலப்பகுதியில் 23 வாகனங்கள் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பேஸ்புக்கில் அமெரிக்காவை விழ்த்திய இந்தியா

wpengine

அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த கபீர் ஹாசீம்

wpengine

மல்வத்து ஓயா திட்டம் சீனாவின் நிதி உதவி மூலம் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும்!-சார்ள்ஸ் MP-

Editor