நேரடி: ஊழலுக்கு எதிரான மாநாட்டில் இன்று உரையாற்றும் ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் இடம்பெறும் ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.
பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் தலைமையில் பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களும் பிரதிநிதிகளும் பங்குபற்றும் ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாடு இன்று (12) லண்டன் நகரில் இடம்பெறுகின்றது.

இதில் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் நிமித்தம், ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் நேற்று (11) காலை பண்டாரநாயக்க சர்வதே விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கி பயணமாகினர்.

கடந்த ஜனவரி மாதம் மோல்டாவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் விடுத்த அழைப்பையேற்றே ஜனாதிபதி இம் மநாட்டில் கலந்து கொள்கிறார்.

இந்த விஜயத்தின்போது மைத்திரிபால சிறிசேன, டேவிட் கெமரூனுடன் இருதரப்பு பேச்சுவர்த்தைகளையும் மேற்கொள்ளவுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares