பிரதான செய்திகள்

நெல் ஆலை உரிமையாளர்களால் அரிசியின் விலையை தீர்மானிக்க முடியாது.

2 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இருப்பினை அடைந்த பின்னர் நாட்டின் நெல் ஆலை உரிமையாளர்களால் அரிசியின் விலையை தீர்மானிக்க முடியாது என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

´2021 ஆம் ஆண்டில் மூன்று இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியும், 5 இலட்சம் மெட்ரிக் தொன் நெல்லும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

அப்படியிருக்கும் போது நமக்கு ஏன் நியாய விலைக்கு நுகர்வோருக்கு அரிசியினை பெற்றுக் கொடுக்கு முடியாது. எம்மிடம் தற்போது 50 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல் உள்ளது. 2 மில்லியன் மெட்ரிக் தொன் அரிசி இருப்பே தற்போதைய எமது இலக்கு. நாம் 2 இலட்சம் இருப்பினை அடைந்த பின்னர் ஆலை உரிமையாளர்களுக்கு ஆட முடியாது. நாட்டின் அரிசி விலை எம்மால் தீர்மானிக்கப்படும்´ என்றார்.

Related posts

புலனாய்வுத்துறை தேடும் முன்னாள் தூதுவரை மஹிந்த சந்தித்து ஏன்?

wpengine

புற்றுநோயை ஏற்படுத்தும் பருப்பு கண்டுபிடிப்பு!

Editor

சமுர்த்தியில் தேர்வு மட்டத்தை அடைந்தவர்களை கௌரவித்த ஜனாதிபதி

wpengine