நெல்லுக்கான சந்தை வாய்ப்பின்மையால் பெரிதும் பாதிப்படைந்துள்ள முல்லைத்தீவு

முல்லைத்தீவில் சிறுபோக அறுவடையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை சந்தைப்படுத்த முடியாத நிலையில் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு – கோட்டைகட்டிய குளம், அம்பலப்பெருமாள் குளம், தென்னியங்கு குளம் உள்ளிட்ட கிராமங்களில் சிறுபோக அறுவடைகள் நடைபெற்று வருகின்றன.

விவசாயிகள் கவலை

இதன்போது, அறுவடை செய்யும் நெல்லை சந்தைப்படுத்துவதில் பல்வேறு சிரமங்களும், இடர்பாடுகளும் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல்லுக்குரிய விலைகள் கிடைக்காத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

எரிபொருள் தட்டுபாடு

அதாவது யூரியா உரத்தினை 40 ஆயிரம் ரூபாவிற்கும், களை நாசினிகளை அதிகூடிய விலைகளுக்கும் வாங்கியே சிறுபோக நெற்செய்கையை மேற்கொண்டுள்ளனர்.

அறுவடைக்கு தேவையான எரிபொருளை அதிகவிலை கொடுத்து வாங்கி, அறுவடை செய்துள்ள நிலையில் நெல்லுக்கான சந்தை வாய்ப்பின்மையால் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares