பிரதான செய்திகள்

நுரைச்சோலை அனல் மின்நிலையம், கற்பிட்டி கடற்படை பகுதியில் கமரா

இலங்கையில் தற்போது ட்ரோன் கமரா பயனன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கற்பிட்டி பகுதியில் பறந்த ட்ரோன் கமரா தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பான விசாரணைகள் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரை சுட்டிக்காட்டி கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மூன்று நாட்களாக ட்ரோன் கமரா நுரைச்சோலை அனல் மின்நிலையம், கற்பிட்டி கடற்படை முகாம், வனாத்தவில்லு கடற்படை முகாம்களுக்கு மேல் பறந்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்த ட்ரோன் கமராவானது வேகமாக பயணிப்பதாகவும், இன்று காலையும் இந்த ட்ரோன் கமரா பறந்ததை அவதானித்ததாகவும் பிரதேசவாசிகளும், கடற்படையினரும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் மேற்படி விடயம் தொடர்பில் விசேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

முஸ்லிம்கள் மீது பலி சுமத்துவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

wpengine

சிங்கள மக்களின் மனநிலையை சம்பந்தனால் மாற்ற முடியுமா

wpengine

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ,பிரதேச செயலகம், மாவட்ட செயலகம் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம்

wpengine