பிரதான செய்திகள்

நீர்கொழும்பு பகுதியில் பதற்ற நிலை! காரணம் பெறும்பான்மை இளைஞர்கள்

நீர்கொழும்பு பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் இன வன்முறையாக மாறி பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்போது சில வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டும், தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன.

முச்சக்கரவண்டி சாரதிகளின் குழுக்களுக்கு இடையிலான முறுகல் நிலை வன்முறையாக மாறியுள்ளது.

இதன்போது சிலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் இருந்த வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

எனினும் அதிரடி படையினர் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு படையினர் அருகாமையிலுள்ள வீடுகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் இந்த வன்முறை சம்பவத்தை ஆரம்பித்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பகுதியில் பெருமளவு முஸ்லிம்கள் மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், இந்த வன்முறை சம்பவம் அந்த மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

முல்லைத்தீவு நகர் பகுதியில் உள்ள சின்னாற்றுக்குள் சடலம்..!!

Maash

எனது ஊகத்தை உறுதி செய்த முதலமைச்சர்

wpengine

ஏழைகளின் தோழனாக றிஷாட்டை கண்டேன்….

wpengine