Breaking
Thu. Sep 12th, 2024
கொழும்பில் நேற்று சிறைச்சாலை பேரூந்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ள தெமட்டகொட சமிந்த என்பவரை ஞானசார தேரர் இன்று நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார்.

பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவரான தெமட்டகொட சமிந்த என்பவர் பாரத லக்ஷ்மன் கொலை தொடர்பாக தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து வரும் வழியில் தெமட்டகொட சமிந்தவை இலக்கு வைத்து சிறைச்சாலை பேரூந்து மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.

இவர் தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிறைக்காவலர்களின் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் இன்று கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு வருகை தந்து தெமட்டகொட சமிந்தவை நலம் விசாரித்துள்ளார்.

அவர் பூரண குணமடைய வேண்டி பிரார்த்தித்து ஆசீர்வதிக்கப்பட்ட பிரித் நூல் ஒன்றையும் சமிந்தவின் கையில் கட்டியுள்ளார்.

பொதுவாக சிறைக்கைதிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் சந்தர்ப்பங்களில் அவர்களை பார்வையிட வெளியார் யாருக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை.

அவ்வாறு அனுமதி வழங்கப்படும் உறவினர்கள் கூட கைதிகளுக்கு எதனையும் வழங்க முடியாது என்பது சிறைச்சாலையின் கடுமையான விதிகளில் ஒன்றாகும்.

எனினும் ஞானசார தேரர் சிறைச்சாலை விதிகளை அப்பட்டமாக மீறி நடந்து கொண்டுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போது அவருக்கான பணிவிடைகளை செய்து கொடுத்தவர் தெமட்டகொட சமிந்த என்று பரவலாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *