அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

நீதிமன்றத்தை நோக்கி படையெடுத்த எதிர்க்கட்சி எம்.பிக்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி எம்.பிக்களும் இன்று காலை நீதிமன்றத்தை நோக்கி படையெடுத்துள்ளனர்.

கோட்டை நீதவான் நீதிமன்ற முன்றலில் அனைத்து எம்.பிக்களும் ஒன்று கூடியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவின் வாகனமொன்று தொடர்பான வழக்கு இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்தநிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க இன்றையதினம் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

இதன் காரணமாக, சுஜீவ சேனசிங்கவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் நீதிமன்றத்தை நோக்கிப் படையெடுத்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சி எம்.பிக்களான மனோ கணேசன், தயாசிறி ஜயசேகர, ரஞ்சித் மத்தும பண்டார, லக்ஸ்மன் கிரியெல்ல, மரிக்கார், ஹர்ச டி சில்வா, பழனி திகாம்பரம், முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட பலரும் நீதிமன்றத்திற்கு வருகைத் தந்திருந்ததுடன், உதய கம்மன்பில, கபீர் ஹாசிம் உள்ளிட்ட மேலும் பலரும் சுஜீவ சேனசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து நீதிமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளனர்.

Related posts

இடம்பெயர்ந்தோரை மீள்குடியேற்றுவது தொடர்பில் வடமாகாண மீள்குடியேற்றச் செயலணி ஆராய்வு

wpengine

ரணில்,மைத்திரி இரகசிய சந்திப்பு! தகவல் வெளியாகவில்லை

wpengine

தமிழ் கூட்டமைப்பு இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்பட வேண்டாம்

wpengine