நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு!

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு சட்ட விரோதமானது எனவும், அந்தப் பிரிவினை உருவாக்குதவற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்ய இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறும் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அல்லே குணவன்ச தேரர் மற்றும் பேராசிரியர் கார்லோ பென்சேகா ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் விஜித் மலல்கொட மற்றும் பிரீதி பத்மன் சூரசேன ஆகியோர் இந்த மனுவை இன்று பரிசீலனை செய்தனர்.

இந்நிலையில்,  குறித்த மனுக்களை எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த தினத்தில் வாதிகள் பிரதிவாதிகள் மனு தொடர்பில் ஏதேனும் எதிர்ப்பு இருக்கும் பட்சத்தில் அதனை சமர்ப்பிக்க முடியும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதேவேளை, மனு தொடர்பிலான எதிர்ப்பு ஆவணத்தை பொலிஸ் மா அதிபர் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் சார்பில் முன்னிலையான சட்ட மா அதிபர் நீதிமன்றில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares