பிரதான செய்திகள்

நிதி மோசடியில் ஈடுபட்ட போலி வைத்தியர் பொரளையில் கைது!

வைத்தியர் போல் நடித்து வௌிநாடுகளுக்கு நபர்களை அனுப்புவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் பொரளை ரிட்வே சிறுவர் வைத்தியசாலைக்கு முன்பாக வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபரிடம் நடத்திய விசாரணையில், அவுஸ்திரேலியாவில் தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, கொழும்பு தேசிய வைத்தியசாலையினுள் வைத்தியர் போல் நடித்து, ஒருவரிடம் 70,000 ரூபாவை பெற்றுக் கொண்டமை தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் பன்னல பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடையவர் எனவும் அவர் வத்துபிட்டியல பிரதேசத்தில் தற்காலிகமாக வசித்து வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (06) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

6 அரச நிறுவனங்களின் தலைவர்கள் பதவி விலகியுள்ளனர், மேலும் பதவி விலகவுள்ள ஆளுந்தரப்பு பா.ம உறுப்பினர்கள்.

Maash

விக்னேஸ்வரன் முதலமைச்சர் பதவிக்கு அருகதை அற்றவர்

wpengine

முஸ்லிம் செயலாளரை நீக்கிவிட்டு அகில விராஜ் நியமனம்

wpengine