பிரதான செய்திகள்

நீதி மன்றத்தில் ஆஜராகாத ஞானசார! குற்றப் பத்திரிகை ஜூலை 18, 19 ,20ம் திகதிகளில் விசாரணை

நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றப் பத்திரிகையை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தினத்தை தீர்மானித்துள்ளது.

இதன்படி, இந்த குற்றப் பத்திரிகை ஜூலை 18, 19 மற்றும் 20ம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இதன்படி, சட்டமா அதிபரால் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப் பத்திரிகை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதேவேளை, இன்று ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை.

மாறாக பிரதிவாதி சார்பில் அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தார்.

மேலும், ஞானசார தேரரைக் கைதுசெய்ய பிடியாணை பிறப்பிக்குமாறு இன்று அரச தரப்பு சட்டத்தரணியால் விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதவான் நிராகரித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

முந்தலில் இரகசியமாக புதைக்கப்பட்ட சிசு குறித்து நீதிமன்றத்தின் உத்தரவு!

Editor

தலைமன்னார்- கொழும்பு ரயில் பாதையில் பலியான யானை

wpengine

உதயன் நாளிதழ் நடாத்திய சித்திரைப் புதுவருட விழா-2017 (படங்கள்)

wpengine