நிதி நெருக்கடிகளை போக்க நிதியமைச்சர் பல்வேறு நடவடிக்கை

இலங்கையில் சமகாலத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி தொடர்பில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்ச நிலையை போக்க நிதியமைச்சர் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாரிய டொலர் நெருக்கடி காரணமாக பல அத்தியாவசிய பொருட்களை தாங்கிய கப்பல்கள் துறைமுறைகத்தில் நீண்ட காலமாக காத்துக் கிடக்கின்றன. எனினும் அவ்வாறான எந்தவொரு நெருக்கடி நிலையும் இல்லையென நிதியமைச்சரான பசில் ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு தெரிவித்து வருகிறார்.

பண்டிகை காலப்பகுதியில் தட்டுப்பாடின்றி உணவு பொருட்கள் வழங்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வாக்குறுதியளித்துள்ளார்.

எதிர்வரும் பண்டிகை காலப்பகுதியில் நுகர்வோருக்கு அத்தியாசிய பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்குதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதே அரசின் நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பால் மா, கோதுமை மா, எரிவாயு மற்றும் சீமெந்து போன்றவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. எனினும் ஏனைய அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் போதியளவு கையிருப்பில் இருப்பதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளால் ஆட்சிப்பீடம் ஏறிய சமகால அரசாங்கம், எதிர்வரும் பண்டிகைக் காலத்தின் போது அவர்களை ஆசுவாசப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையே இந்த அறிவின் வெளிப்பாடு என சமூக ஆர்வர்கள் தெரிவித்துள்ளனர்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares