பிரதான செய்திகள்

நாவலடி பிரதேசத்தில் கஞ்சா விற்பனை! ஒருவர் கைது

(அனா)

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் நாவலடிசந்தி பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையிலும் கஞ்சா விற்பனை செய்த ஒருவர் நேற்று இரவு கைது செய்யபட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட போதைவஷ்து ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எம்.ஐ.அப்துல் வஹாப் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் நாவலடிசந்தி பிரதேசத்தில் வாகனங்களுக்கு டயர் திருத்தும் கடை வைத்துள்ள ஒருவர் வெளியூர்களைச் சேர்ந்த நன்கு அறிமுகமான நபர்களுக்கு கஞ்சா விற்று வருவதாக மட்டக்களப்பு மாவட்ட போதைவஸ்து ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த நபரின் வர்த்தக நிலையத்தை சேதனையிட்ட போது அவரிடம் இருந்து 5000அப கஞ்சா கைப்பறப்பட்டதாகவும் கஞ்சாவுடன் கஞ்சா விற்பiயில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் வாகன டயர் திருத்தும் கடை உரிமையாளரும் கைது செய்யப்பட்டுளார்.

குறித்த சந்தேக நபரையும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சாவையும் மேலதிக விசாரனைக்காக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட போதைவஸ்து ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எம்.ஐ.அப்துல் வஹாப் மேலும் தெரிவித்தார்.

Related posts

வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்வதற்கான கால எல்லை மேலும் நீடிப்பு!

Editor

வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக தர்மபால நியமனம்

wpengine

மட்டக்களப்பு மாவட்ட செயலக ஊழல்! லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

wpengine