பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

நாளை வேப்பங்குளத்தில் Pfizer தடுப்பூசி! மன்னாரில் உள்ளவர்கள் மட்டும்.

15.07.2021ம் திகதி காலை 7-30 மணி முதல் முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட/முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்க்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்குமான கோவிட் 19 க்கு எதிரான Pfizer தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கையானது வேப்பங்குளம் பாடசாலையில் இடம்பெற உள்ளது.

இவ்அரிய சந்தர்ப்பத்தினை தவறவிடாது கொவிட்19 தடுப்பு மருந்தினை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இதில் முசலி பிரதேச செயலாளர் பிவிற்குட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதிற்கு மேற்பட்ட எவரும் இத் தடுப்பு மருந்தினை பெற்றுக்கொள்ளலாம்,தடுப்புமருந்தினை மன்னார் மாவட்டத்தினை நிரந்தர வதிவிடமாக கொண்டவர்கள் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும்.

என்பதுடன் தங்களுடைய வதிவிடத்தை உறுதிப்படித்திக் கொள்ள தேசிய அடையாள அட்டையினை கொண்டு வருதல் கட்டாயமாகும் முதலி வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.


தடுப்பு மருந்தினை பெற்று கொவிட் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவோம்

Related posts

பலவந்த வெளியேற்றம் பழிவாங்கலா? பாதுகாப்பா?

wpengine

மே மாத இறுதிக்குள் கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைக்க நடவடிக்கை!

Editor

அமைச்சர் றிஷாட்டின் முயற்சியினால் வவுனியா குப்பைகளை மீள் சூழற்சிப்படுத்தும் திட்டத்திற்கு ரூபா 200 மில்லியன் ஒதுக்கீடு! களத்தில் ஆராய்வு

wpengine