பிரதான செய்திகள்

நாளை மீண்டும் 8மணிக்கு ஊரடங்கு சட்டம்.

மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை தளர்த்த புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


இந்தப் பகுதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 4ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் நாட்களில் அதனை தளர்த்துவது குறித்து நடைமுறைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.


புதிய நடைமுறை குறித்து அடுத்து வரும் சில தினங்களில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றின் அபாய வலயமாக கருதப்படும் மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டத்தை தவிர்த்து ஏனைய மாவட்டங்களுக்கு நாளை காலை 5 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு மீண்டும் இரவு எட்டு மணிக்கு அமுல்படுத்தப்படும்.


ஊரடங்கு சட்டத்தை தளர்த்தும் பிரதேசங்களில் மக்கள் தங்கள் அன்றாட நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்கு விசேட நடைமுறை ஜனாதிபதி ஊடக பிரிவினால் அறிவிக்கப்பட்டது.


தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கமைய ஒரு நாளில் பொது மக்கள் தங்கள் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக நீக்கப்படும் பிரதேசங்களில் மக்கள் தங்கள் தொழில் நடவடிக்கைகளுக்காக வெளியே செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


அதற்கு தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கம் அவசியமில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நாளை (09) பதவிப் பிரமாணம்

wpengine

ஜோசப் ஸ்டாலினுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேசியுள்ளார்! கைது சட்டபூர்வமானது.

wpengine

இழந்து நிற்கும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ளும் தூய எண்ணம் றிஷாட்டிம் உண்டு

wpengine