நாமல் ராஜபக்ஸ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிற்கு

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிற்கு இன்று அழைக்கப்பட்டிருந்தார்.

இந்திய நிறுவனமொன்றிடம் இருந்து பெற்றுக்கொண்ட நிதி தொடர்பில் வாக்குமூலம் பதிவுசெய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து உபகுழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் வாக்குமூலம் பதிவுசெய்வதற்கு பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares