நாமல் ராஜபக்ஸவிற்கு சொந்தமானது என கூறப்படும் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை இடைநிறுத்த உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவிற்கு சொந்தமானது என கூறப்படும் நிறுவனமொன்றின் நான்கு வங்கிக் கணக்குகளை இடைநிறுத்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொலிஸ் நிதி மோசடி பிரிவினரின் கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நிதி தூய்தாக்கல் தொடர்பான முறைப்பாட்டுக்கு அமைய, விசாரணைகளுக்காக குறித்த வங்கிக் கணக்குகளை இடைநிறுத்துமாறு நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டியவிடம் கோரிக்கை முன்வைத்தனர்.

நாமல் ராஜபக்ஸவிற்கு சொந்தமானது என கூறப்படும் வர்க்கர்ஸ் கோப்பரேஷன் என்ற நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கு எவ்வாறு நிதி பெற்றுக் கொள்ளப்பட்டது என்பது தொடர்பில் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares