நான் யாரையும் தாக்கவில்லை! தாக்கி இருந்தால் சத்திரசிகிச்சைக்கு சென்று இருப்பார்.

நாடாளுமன்ற பதற்றத்தின்போது தாம் எவரையும் தாக்கவில்லை என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான பாலித தேவரப்பெரும தெரிவித்துள்ளார்.

தாம் யாரையாவது தாக்கியிருந்தால் அவர் நிச்சயமாக சத்திரசிகிச்சை அறைக்கு சென்றிருப்பார் என்று அவர் தமது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கூட்டு எதிர்க்கட்சியினர் நாடாளுமன்ற அமர்வுகளை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயல்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares