பிரதான செய்திகள்

நான் மகப்பேற்று விடுமுறையில்! ஊடகங்கள் என்னை விட்டுவிடுங்கள் ஹிருனிகா

தாம் மகப்பேற்று விடுமுறையில் இருப்பதாகவும் தம்மை விட்டுவிடுமாறும் ஊடகங்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது முகநூல் கணக்கின் ஊடாக அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் தாம் உரையாற்றியதாக சில இணைய தளங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த முட்டாள்தனமான வதந்தி இணைய தளங்களுக்கு என்ன பிரச்சினை என்று எனக்கு புரியவில்லை. எவ்வாறு இந்த ஊடகங்கள் போலியான செய்திகளை பிரசுரிக்கின்றனர்.

தொடர்பு இல்லாத தலைப்பில் நாடாளுமன்றில் உரையாற்றியதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாம் மகப்பேற்று விடுமுறையில் இருப்பதாகவும் கொஞ்ச காலத்திற்கு இந்த சர்ச்சைகளிலிருந்து விடுபட்டிருக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் அழுக்கு விளையாட்டுக்களில் என்னை இணைத்துக் கொள்ள வேண்டாம். நிம்மதியாகவும் அமைதியாகவும் இருக்க தயவு செய்து இடமளியுங்கள். என்னை விட்டுவிடுங்கள் என அவர் கோரியுள்ளார்.

ஹிருனிகா பிரேமசந்திர கருவுற்றிருப்பதால் அண்மைய நாடாளுமன்ற அமர்வுகள் எதிலும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இறக்காமம் மாயக்கல்லி மலை சிலை! ஆளுநரை சந்தித்த ஹக்கீம்

wpengine

“பால் நிறைந்த தேசம்” பரிசளிப்பு நிகழ்வு; பிரதம அதிதியாக ஜனாதிபதி

wpengine

நல்லாட்சியை தோற்கடித்து, இந்த கள்ளாட்சி, பதவிக்கு வந்தது.

wpengine