பிரதான செய்திகள்

நான் பிரதமரானால் பட்டதாரிகளுக்கு மூன்று மாதங்களுக்குள் நியமனங்கள்

பட்டதாரிகளுக்கான தொழில் திட்டம் தேர்தல்கள் திணைக்களத்தினால் இடைநிறுத்தப்பட்டமைக்கு தாமே காரணம் என்று அரசாங்கத்துக்கு ஆதரவான சமூக ஊடகங்கள் பிரசாரம் செய்வதாக ஐக்கிய தேசிய சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.


அரசாங்கத்தின் பட்டதாரி நியமன நிகழ்ச்சி திட்டத்தை இடைநிறுத்துமாறு தாம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம் எழுதியதாக சமூக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இது முற்றிலும் தவறானது என்று சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.


எனினும் பட்டதாரி நியமனம் தொடர்பில் அளித்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாத அரசாங்கம் தேர்தல் அறிவிக்கப்பட ஒரு வாரம் இருக்கையில் நியமனக்கடிதங்களை பட்டதாரிகளுக்கு அனுப்ப ஆரம்பித்துள்ளது.


மார்ச் முதலாம் திகதி பணிகளுக்கு சமூகம் தரும் வகையில் இந்த கடிதங்கள் அனுப்பப்பட்டன.அதாவது தேர்தல் அறிவிக்கப்பட்டால் நியமனங்களை வழங்க முடியாமல் போகும் என்று தெரிந்துக்கொண்டே இதனை அரசாங்கம் செய்துள்ளது.


இதன் மூலம் இந்த பொறுப்பில் இருந்து விலகிக்கொள்ளலாம் என்பதே அரசாங்கத்தின் திட்டமாகும் என்றும் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.


இதேவேளை தாம் பிரதமரானால் பட்டதாரிகளுக்கு மூன்று மாதங்களுக்குள் நியமனங்கள் வழங்கப்படும் என்று சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்.

Related posts

சுதந்திரக் கட்சிக்கு ஏழு புதிய மாவட்ட அமைப்பாளர்கள் நியமனம்! இரண்டு முஸ்லிம்கள்

wpengine

பௌத்த மதத்திற்கு எந்த இடையூறுகளும் ஏற்படாது -விஜேதாச ராஜபக்ஷ

wpengine

வட மாகாண பாராளுமன்ற உறுப்பினரின் மகன் மீது தாக்குதல்

wpengine