நான் கண்ட தலைவன் றிஷாட் பதியுதீன்….

நான் அரசியல் குறித்து நவமணியில் எழுதிய காலம். வில்பத்து பற்றிய தெளிவு எனக்கு தேவைப்பட்டது. ஒரு நாள் அங்கு அ.இ.ம.காவின் தவைலர் றிஷாட் பதியுதீனோடு செல்லும் வாய்ப்பும் கிட்டியது. அவரோடு பயணித்தேன். அந்த பயணத்தில் அவர் பல இடங்களுக்கு சென்றார்.

ஒரு கிரவல் வீதியால் வந்து கொண்டிருக்கும் போது, மூன்று வயதான தாய் மார்கள் வந்துகொண்டிருந்தனர். அப்போது அ.இ.ம.காவின் தவைலர் றிஷாட் பதியுதீன், தனது வாகனத்தை நிறுத்தி சுகம் விசாரித்தார். அரசியல் வாதிகள் சுகம் விசாரிப்பது வழமை தானே! அறிந்தவர்களென்றாலும் சரி, அறியாதவர்களென்றாலும் சரி. இதனைத் தான் அந்த தாய்களும் நினைத்திருந்திருக்க வேண்டும்.

அதிலொரு தாய், ” நான் யாரென தெரியுமா” என அ.இ.ம.காவின் தவைலர் றிஷாட் பதியுதீனிடம் கேட்டார். அந்த கேள்வியில் இவருக்கு எங்கே என்னை நியாபகமிருக்கப் போகிறதென்ற தோரணை தெரிந்தது. நிச்சயம் அந்த வயதான தாய் அ.இ.ம.காவின் தவைலர் றிஷாட் பதியுதீனை அரசியல் ரீதியாக கடுமையாக எதிர்க்கும் ஒருவராக (அவரது குடும்பமும் ) இருக்க வேண்டும். கேட்ட தொணி அப்படியே இருந்தது.

அ.இ.ம.காவின் தவைலர் றிஷாட் பதியுதீனோ, “நீங்கள் இன்னாருடைய தாயல்லவா” என்றார். அந்த தாயோ, என்னை உனக்கு நியாபகம் இருக்குதா ( முகத்தில் ஆச்சரியம் தெரிந்தது ), நீ போ மன என கூறினார். அவரில் சடுதியான மாற்றத்தை அவதானிக்க முடிந்தது. அந்த மாற்றம், என்னை நியாபகம் வைத்திருப்பதென்பது அனைத்தையும் விட பெரியது என அந்த வயதான தாய் உணர்ந்ததன் வெளிப்பாடாக இருக்க வேண்டும். இவர் அமைச்சரான பிறகு, தன்னை எங்கே நியாபகம் வைத்திருக்கப் போகிறார் என அந்த தாய் நினைத்துக் கொண்டிருந்தார் போல.

இது அ.இ.ம.காவின் தவைலர் றிஷாட் பதியுதீனின் நியாபக சக்தியை எடுத்துக் கூறும் பதிவல்ல. அவர் மனிதனை மனிதனாக மதிக்கும் பண்பு கொண்டவர் என்பதை வெளிப்படுத்தும் பதிவே. ஒரு அமைச்சராக இருந்தும் யாரையும் மறக்கவில்லை. சிறிய பதவி கிடைத்தாலே அனைத்தையும் மறப்பவர்களிடையே அ.இ.ம.காவின் தவைலர் றிஷாட் பதியுதீன் போற்றப்பட வேண்டியவர். தேர்தல் வந்தால் மாத்திரம் மக்களை மனிதனாக மதிக்கும் பண்பு கொண்டரவல்ல அ.இ.ம.காவின் தவைலர் றிஷாட் பதியுதீன்.

இவரின் பண்புகளை நேரடியாக கண்ணுறும் யாருக்கும் இவரை துளியளவும் விமர்சிக்க மனம் வராது.
இவர் எம்மை ஆள தகுதியானவரா..?
சிந்திப்போம்… செயல்படுவோம்…

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares