”நான் ஒரு தமிழ் இன துரோகி” சுமந்திரனின் உருவப் பொம்மை

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் உருவப் பொம்மை நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு தூபிக்கு அண்மையில் இனம் தெரியாத நபர்களினால் வைக்கப்பட்டுள்ளது.


அவ்வாறு வைக்கப்பட்டுள்ள உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு உள்ளது.


”நான் ஒரு தமிழ் இன துரோகி” என்ற பதாகையை குறித்த உருவ பொம்மையில் தொங்க விடப்பட்டுள்ளது.


கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்துக்களைத் தெரிவித்திருந்த கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் ஆயுதப் போராட்டம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து இருந்தார்.


இதற்கு அவரது கட்சிக்குள்ளும் வெளியிலும் பல எதிர்ப்புக்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், குறித்த உருவப் பொம்மையினை யாழ்ப்பாணம் பொலிஸார் சற்றுமுன்னர் வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து அகற்றியுள்ளனர்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares