பிரதான செய்திகள்

நான் ஏன்? சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை மைத்திரியின் கவலை

அண்மையில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் கபீர் ஹாசிமின் மகளின் திருமண நிகழ்வில் கலந்துக்கொள்ள தான் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் பாதுகாப்பு பிரிவினர் தன்னை இடையில் நிறுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


அந்த இடத்தில் இருந்து தான் நடந்து செல்லும் நிலைமை ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனால், இம்முறை சுதந்திர தினத்திலும் இப்படியான நிலைமை ஏற்படும் என நினைத்து சுதந்திர தின நிகழ்வில் கலந்துக்கொள்ளவில்லை எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.


இம்முறை சுதந்திர தின நிகழ்வில் ஏன் கலந்துக்கொள்ளவில்லை என கேட்ட போது தனக்கு நெருக்கமானவர்களிடம் முன்னாள் ஜனாதிபதி இந்த தகவலை கூறியுள்ளார்.

Related posts

டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரியின் இப்தார் நிகழ்வு

wpengine

ஏ.ஸ்ரான்லி டி மெல் தலைமையில் பெரும்போக பயிர்ச் செய்கை தொடர்பான விசேட கூட்டம்

wpengine

நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு!

wpengine