பிரதான செய்திகள்

நானாட்டான் பிரதேச செயலாளரின் நடவடிக்கையினால் பாதிக்கப்படும் சமுர்த்தி பயனாளிகள்

மன்னார் மாவட்டத்தில் நானாட்டன் பிரதேச செயலகத்தின் புதிய செயலாளர் கீரிஸ் கந்தையா (அண்டன்) மேற்கொண்ட ஒரு நடவடிக்கையினால் நானாட்டான் பிரதேசத்தில் உள்ள சமுர்த்தி பயனாளிகள் மற்றும் வங்கி ஊழியர்கள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கி உள்ளதாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்;

நானாட்டன் சமுர்த்தி வங்கி பிரதேச செயலகத்தின் அருகில் உள்ள வளாகத்தில் இருக்கின்ற தனியான காணியில் சமுர்த்தி வங்கி அமைந்துள்ளது. உள்ளே செல்வதற்கு தனியான நுளைவாயில் அமைக்கபெற்றுயிருந்தும் மன்னார் ,நானாட்டான் பிரதான வீதியில் இருக்கின்ற  நுளைவாயின் ஊடாக வங்கிக்கு விரைவாக சென்று நடவடிக்கையினை மேற்கொண்ட சமுர்த்தி பயனாளிகள் தற்போது பல சிறமங்களை எதிர்நோக்கி வருகின்றார்.என அறியமுடிகின்றது.

சமுர்த்தி பயனாளிகளையும் பற்றி பிரதேச செயலாளர் யோசிக்காமல் தன்னுடைய சுய நிர்வாக கட்டுபாட்டையும்,ஊழியர்களின் நடவடிக்கையினை “கமெராவில்” பார்த்துகொள்ள  சமுர்த்தி பயனாளிகள் வங்கிக்கு சென்ற பிரதான வீதியில் உள்ள நுளைவாயிலை தற்போது அடைத்துள்ளார்.

இது தொடர்பில் சமுர்த்தி பயனாளிகளின் அகௌகரியங்களை கருத்தில் கொண்டு பிரதான வீதியில் அமைந்துள்ள நுளைவாயிலை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச சமுர்த்தி பயனாளிகள் கோரிக்கை விடுக்கின்றார்.

Related posts

Dr. Kelegama to Speak on the State of the Economy

wpengine

நாளை 3 மணித்தியாலம் பணிப்புறக்கணிப்பில் தாதியர்கள் சங்கம்!

Maash

போரை முடிவிற்கு கொண்டு வந்த தனக்கு வரியை குறைப்பது பெரிய விடயம் கிடையாது மஹிந்த

wpengine