பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

நானாட்டான் பிரதேச செயலக காணி போதானாசிரியரின் லீலைகள்! பலர் விசனம்

மன்னார் மாவட்டத்தில் நானாட்டன் பிரதேச செயலகத்தில் காணி வெளிக்களப்போதனாசிரியராக கடைமையாற்றும் சதாசிவம் அகிலன்தொடர்சியாக லஞ்சம் பெறுவது கடைமை நேரத்தில் மது அருந்துவது மற்றும் இரவுவேளைகளில் பெண்களுக்கு குறுந்தகவல் அனுப்புவது மற்றும் தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்துவது என தனது அதிகார துஷ்பிரயோகத்தை தொடர்ந்துவந்துள்ளார் என அறியமுடிகின்றது.

இந்நிலையில்  வங்காலை கிழக்கு கிராம அலுவலர் பிரிவின் ஆனாள்நகர் பகுதியில் பொதுத்தேவைக்கு என ஒதுக்கப்பட்ட காணி ஒன்றை செபமாலை யேசுதாசன் றெவல் என்பவருக்கு வழங்குவதாக கூறி லஞ்சமாக ரூபா 50000/= கேட்டுள்ளார்.

இந்நிலையில் வறிய குடும்பத்தை சேர்ந்த யேசுதாசன் ரூபா 50000/=ஐ   தனது நகையை அடைவு வைதது மன்னார் பிரதேச செயலகம் முன்பாக வைத்து அத்துனுஸ் சில்வா என்பவருடன் சென்று 23/06/2020 அன்று வழங்கியுள்ளார்.

மேலும் காணிக்கு லஞ்சமாக பணம் வழங்கியும் காணியை வழங்காத காரணத்தால் கவலையடைந்த றெவல் குறித்த விடயத்தை கடித மூலம் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியிருந்தார்.

இது தொடர்பில் நேற்று 18/09/2020 விசாரணைகளை மேற்கொண்ட மாகண காணி ஆணையாளர் திணைக்களத்தின் உதவிக் காணி ஆணையாளர் குறித்து லஞ்சம் பெறப்பட்டதை உறுதிப்படுத்தியதோடு சாட்சிகளிடம் இருந்து  சாட்சியங்களையும் ஆதாரங்களும் கிடைக்கபெற்றுள்ளதாக அறியமுடிகின்றன.

எனவே இது தொடர்பில் உரிய அதிகாரிகள் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென பாதிக்கப்பட்டவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

Editor

சஹ்ரானின் சகோதரருக்கு சிகிச்சை அளித்தவர் கைது

wpengine

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்திலிருந்து ஊழல் மோசடிகள்

wpengine