நானாட்டான் பாடசாலை கொரானா நீக்கும் நடவடிக்கை

பாடசாலைகள் இன்று முதல் ஆரம்பிப்பதை முன்னிட்டு மன்னார் – நானாட்டான் பிரதேசசபையால் பாடசாலைகளில் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட ‘கொரோனா வைரஸ்’ தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் பிற்பகுதியில் நாட்டில் உள்ள பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில் குறித்த பாடசாலைகள் இன்று முதல் மீளவும் ஆரம்பிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


அதற்கமைவாக மன்னார்- நானாட்டான் பிரதேச சபை பிரிவில் உள்ள பாடசாலைகளில் கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கைகளை நானாட்டான் பிரதேச சபையின் சுகாதார ஊழியர்களால் நேற்று முன்னெடுக்கப்படுள்ளன.


பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சுகாதார பாதுகாப்பினை கருத்தில் கொண்டு தொற்று நீக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நானாட்டான் பிரதேச சபை தலைவர் தி.பரஞ்சோதி தெரிவித்துள்ளார்.


இதன்படி மாவிலங்கேணி,குஞ்சுக்குளம் ,பெரிய முறிப்பு ,பூமலர்ந்தான் கிராமங்களில் உள்ள பாடசாலைகளிலும் கிருமித் தொற்று நீக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares