பிரதான செய்திகள்

நாட்டை மீட்க ஜப்பானின் ஈடு இணையற்ற ஆதரவு அவசியம் சஜித் கோரிக்கை

நாட்டின் அசாதாரமாண சூழ்நிலைகளுக்கு மத்தியில் ஜப்பானிய தூதுவர் மிஷுகோஷி ஹிடே கிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பானது நேற்று (08) எதிர்க்கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.

இவ்வாறு இடம்பெற்ற சந்திப்பில் நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்க ஜப்பானின் ஈடு இணையற்ற ஆதரவு அவசியம் எனவும் , அதற்கு தூதுவர் தலையிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள நிலவிவரும் இராஜதந்திர உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்தும், இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பின் தேவைப்பாடு குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.  

Related posts

இறைச்சி வாங்குவோரின் கவனத்திற்கு

wpengine

பாகிஸ்தான்-இலங்கை முதலீட்டாளர் சங்கம் நிதி உதவி

wpengine

அலி சப்ரி,விக்னேஸ்வரன் முன்வரிசை! பலர் விசனம்

wpengine