நாட்டைப் பிளவுபடுத்த முயற்சிக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரனைக் கைதுசெய்து வேண்டும்!

நாட்டைப் பிளவுபடுத்த முயற்சிக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைக் கைதுசெய்து அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிங்கள ராவய அமைப்பு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் அப்பதவியிலிருந்து விலகி சிங்களவர் ஒருவருக்கு இடமளிக்க வேண்டும் என்றும் சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்தார்.

சிங்கள ராவய அமைப்பின் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பு கிருலப்பனையில் அமைந்துள்ள பொதுபல சேனா அமைப்பின் அலுவலகத்தில் கடந்த (19-04-2016) செவ்வாய்க்கிழமை முற்பகல் நடைபெற்றது.இதில் கலந்துகொண்டு உரையாற்றும்  போதே மாகல்கந்தே சுதந்த தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கும் போது,

வடமாகாண சபையில் அண்மையில் முன்வைக்கப்பட்ட யோசனையானது நாட்டை மீண்டும் யுத்த சூழ்நிலைக்குத் தள்ளக்கூடியதும், இரத்த ஆறு ஓடச் செய்யும் வகையிலும் அமைந்திருக்கின்றது.நாட்டைப் பிரிக்கும் இந்த யோசனைக்கு சிங்கள ராவய அமைப்பு ஒருபோதும் உடன்படாது என்பதோடு முற்றாக அதனை எதிர்க்கின்றோம்.

இவ்வாறானதொரு யோசனையை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்னாள் நீதியரசர் என்பதோடு, அரசியலமைப்பு பற்றியும் அறிந்தவர். எனினும் இந்த யோசனையை முன்வைத்ததன் மூலம் அவர் அரசிலமைப்பை மீறிச் செயற்பட்டுள்ளார். எனவே கைதுசெய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கவேண்டிய குற்றத்தை அவர் செய்திருக்கின்றார். இந்த நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டு சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட வேண்டும்.

எனவே கைதுசெய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கவேண்டிய குற்றத்தை அவர் செய்திருக்கின்றார். இந்த நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டு சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட வேண்டும்.எதிர்க்;கட்சித் தலைவர் இரா சம்பந்தன் தமிழர்களுக்கு மட்டும் சேவை செய்யாமல் அனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்ய முன்வர வேண்டும்.

இருப்பினும் இரா. சம்பந்தன் தமிழ் மக்கள் சார்ந்த பிரச்சினைகளில் மட்டும் தலையீடு செய்கின்றார். தமிழீழ விடுதலைப் புலிகளின் கோரிக்கைகளையும் அவர் நியாயப்படுத்தும் வகையில் அண்மையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற அவரது பேச்சில் புலப்பட்டது.

சிங்களவர் ஒருவர் எமக்கு எதிர்க்கட்சித் தலைவராக இல்லாதிருப்பதே இதன் பிரதான பிரச்சினை. இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். இரா. சம்பந்தன் அப்பதவியிலிருந்து விலகி இடங்கொடுக்க வேண்டுமெனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares