நாட்டுக்கு தேவையான டொலரை பெற்றுக்கொள்ள மன்னாருக்கு சென்றேன் முன்னால் அமைச்சர் ரவி

நாட்டுக்கு டொலர்களை தேடும் திட்டத்துக்காக தான் உலங்கு வானூர்த்தி மூலம் வடக்கிற்கு சென்றதாக முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் 4000 பேருக்கு சதொச வவுச்சர் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ரவி கருணாநாயக்கவிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவ்வாறு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உலங்கு வானூர்தியில் ஏன் வடக்கிற்கு சென்றீர்கள் என்று ஊடகவியலாளர்கள் கேட்டதற்கு, “நான் ஏன் போக முடியாது? நான் அரசாங்கத்தில் இல்லை. அதனால் நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் முதலீட்டாளர்களுடன் சென்று டொலர்களை சேகரிக்க முயற்சிக்கும்போது, ​​​​அதனையும் தவறாக பார்க்கின்றார்கள். ஊடகங்களும் இதனை அறிந்துக் கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தில் பதவி ஏற்பீர்களா என ஊடகவியலாளர்கள் அவரிடம் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ரவி கருணாநாயக்க, தேவை பதவிகள் அல்ல மக்களுக்கு உதவுவதே என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

கடந்த 2ஆம் திகதி மன்னாரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் முன்னாள் அமைச்சரான ரவி கருணாநாயக்க கலந்து கொண்டார். இதற்காக கொழும்பில் இருந்து உலங்கு வானூர்தி மூலம் மன்னார் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்த்ககது. 

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares