நாட்டுக்குள் சிக்கலான பல பிரச்சினைகள் எழுந்துள்ளன: மாநாயக்க தேரர்

நாட்டுக்குள் சிக்கலான பல பிரச்சினைகள் எழுந்துள்ளதாக அஸ்கிரிய பௌத்த பீடத்தின் புதிய மாநாயக்க தேரர் வராகொட ஞானரதன தேரர் தெரிவித்துள்ளார்.

புதிய மாநாயக்கரான தெரிவான பின்னர் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு பௌத்த பிக்குகளினால் நிறைவேற்றப்பட வேண்டிய கடமை குறித்து சங்க சபையினரும் கலந்துரையாடி பதில் வழங்க எண்ணியுள்ளேன்.

எதிர்காலத்தில் புத்தசாசனத்தை பாதுகாப்பது, தலதா மாளிகையை பாதுகாப்பது, பௌத்த மக்களின் எதிர்பார்ப்புகளை ஈடேற செய்ய முடிந்தளவில் பணியாற்ற போவதாகவும் மாநாயக்க தேரர் கூறியுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares