பிரதான செய்திகள்

நாட்டில் மீண்டும் நடைமுறைக்கு வரும் கொரோனா கட்டுப்பாடுகள்!

கொவிட்  தொற்றுக்குள்ளான 7 பேர் நேற்றைய தினமும் 4 பேர் நேற்று முன்தினமும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது இலங்கையில் கொவிட் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைவாக இருந்த ஒரு காலத்திற்குப் பிறகு மீண்டும்  ஏற்பட்டுள்ளமையினால் அதிக அவதானம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன் காரணமாக சுகாதார ஆலோசனைகளை தொடர்ந்து பின்பற்றுவது மிகவும் அவசியம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன ஆலோசனை வழங்கியுள்ளார்.

பலர் கொவிட் நோய் தொற்று பற்றி மறந்துவிட்டதால், பயணத்தின் போது முகக்கவசம் அணிவது, சவர்க்காரம் பயன்படுத்தி கைகளை தவறாமல் கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியைப் பேணுதல் போன்ற சுகாதார பழக்கங்களை அவர்கள் மறந்துவிட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

அஷ்ரப்பின் அறிக்கை வெளிவர வேண்டும்! இன்று ஏறாவூரில் கையெழுத்து வேட்டை

wpengine

சம்மாந்துறையில் தார் வீதிகளை திறந்து வைத்த அமைச்சர் ஹக்கீம்

wpengine

கற்பிட்டி நகரில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு எதிராக அறிவித்தல்

wpengine