பிரதான செய்திகள்

நாட்டில் மின்சார விநியோகத்தில் தடை மேற்கொள்ளப்படமாட்டாது.

தமிழ் சிங்கள புதுவருடத்தின் போது நாட்டில் மின்சார விநியோகத்தில் தடை மேற்கொள்ளப்படமாட்டாது என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் வைத்து அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் நாட்டில் மழை வீழ்ச்சியின்மையால், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.

பொதுமக்களின் ஒத்துழைப்பு காரணமாக நாட்டில் தற்போது மின்சாரத்தின் தேவை 3700 அலகுகளில் இருந்து 3200 அலகுகளாக குறைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மின்சார விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடை இன்னும் 10 நாட்களுக்கு மாத்திரமே நீடிக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related posts

முன்னால் அமைச்சர் ராஜபஷ்சவுக்கு !உலமா சபை கண்டனம்

wpengine

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

wpengine

ஓட்டமாவடி – மீராவோடை சந்தையின் பின் பகுதி ஆற்றில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

Maash