செய்திகள்பிரதான செய்திகள்

நாட்டில் கடுமையான உப்புத்தட்டுப்பாடு , 500 ரூபாய்க்கு விட்பனை !


இலங்கையில் சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உப்பு இறக்குமதி தாமதம் ஏற்பட்டதன் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

30 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் அளித்திருந்தாலும், அதனை இறக்குமதி செய்வதில் ஏற்பட்ட தாமதத்தால் அந்த சங்கத்தின் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்தார்.

இதன் காரணமாக சந்தையில் உப்புக்கு தட்டுப்பாடும் விலை உயர்வும் ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியார்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரத்தில் குறித்த உப்புத் தொகை கிடைத்த பின்னர் உப்பு தட்டுப்பாடு கட்டுப்படுத்தப்படும் என உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் சில பகுதிகளில் ஒரு கிலோகிராம் கட்டி உப்பு பையொன்றின் விலை 450 ரூபா முதல் 500 ரூபா வரையில் விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் – தமிழக முதலமைச்சர் மு . க .ஸ்டாளின்

Maash

2வது நாளாகவும் தொடர்ந்த மன்னார் சமுர்த்தி பயனாளிகளின் போராட்டம்!

Editor

சவுதி அரேபியாவின் நிதி உதவியுடன்! வலிப்பு நோய் 8மாடி கட்டிடம்

wpengine