பிரதான செய்திகள்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மாலை வேளையில் மழை பெய்யும் சாத்தியம்!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடுத்த சில நாட்களில் மாலை வேளையில்இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான நிலைமை விருத்தியடைந்துவருகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில்பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்திலும் முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

தேசிய ஷூரா சபை அரசியலமைப்பு தொடர்பான தமது பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது

wpengine

வவுனியாவில் இலங்கை போக்குவரத்து சபையினர் பணிப்புறக்கணிப்பு

wpengine

சமூக ஊடகங்களில் வெறுப்புணர்வை பரப்பிய சந்தேக நபர் ஒருவர் விளக்கமறியல்

wpengine