பிரதான செய்திகள்

நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழையுடனான காலநிலை!

மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது கிழக்கு அல்லது வடகிழக்கு திசையிலிருந்து திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20 – 30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படுவதால் மக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

(வளிமண்டலவியல் திணைக்களம்)

Related posts

வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு வாகன அனுமதிப் பத்திரங்கள்

wpengine

பச்சை மிளகாய் ஒருகிலோ கிராம் 1,200 ரூபாய்க்கு விற்பனை

Maash

Unlimited இணைய வசதிகள்! Package களுக்கு அனுமதி

wpengine