நாட்டின் இறைமையை பாதுகாக்க விரும்புபவர்கள் கிருலப்பனை கூட்டத்தில் பங்கேற்பர்

முன்னாள் அமைச்சர் பெஸில்   ராஜபக்ஸ தலைமையில் கரன்தெனிய அகலிய பிரதேசத்தில் கூட்டமொன்று நடைபெற்றது.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள பெஸில் ராஜபக்ஸ பல்வேறு பிரசேங்களுக்கு சென்று வருகிறார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பெஸில் ராஜபக்ஸ;

டீ.ஏ ராஜபக்ஸ வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்தே வெற்றி பெற்றார். நாம் அதற்கு அஞ்சுவதில்லை என்பதனை கூற விரும்புகிறேன். நாம் இம்முறை மே தினத்தை நடத்துகிறோம். இதற்கு கட்சி நிறம் என்ற வேறுபாடு இல்லை. நாட்டின் இறைமை, மற்றும் மக்களுக்கு கிடைத்த சுதந்திரத்தை பாதுகாக்க விரும்புவோர் அனைவரும் கிருலப்பனை மே தினக் கூட்டத்திற்கு செல்வர்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares