பிரதான செய்திகள்

நாடு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. தாய் நாட்டுக்காகவே போராடுகின்றோம்”

“அரசியலை நாடகமாகக் கொண்டு செயற்படும் தரப்பினருக்கு, அரசுக்குள் இருந்துகொண்டு நாம் போராடுவது நாடகமாகவே தெரியும். ஏனெனில் அவர்களுக்கு நாடகத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாது, புரியாது.” என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச(Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.

‘யுகதனவி’ ஒப்பந்தத்துக்கு எதிராக அரச பங்காளிக் கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட நேற்றைய கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அமைச்சரவையில் யுகதனவி உடன்படிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என்பதை வெளிப்படையாகவே அறிவித்தோம். நீதிமன்றம் கூட சென்றுள்ளோம். வெளிப்படையாக எமது எதிர்ப்பை பதிவுசெய்கின்றோம். இதுவும் நாடகமென விமர்சிக்கின்றனர்.

ஆட்சியைக் கவிழ்க்க நாம் போராடவில்லை. அதற்கான அரசியல் காய்ச்சலும் எமக்கு ஏற்படவில்லை. நாடு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. தாய் நாட்டுக்காகவே போராடுகின்றோம்” என தெரிவித்துள்ளார்.

Related posts

முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று சொல்லுவோர்! உலகம் இருட்டி விட்டதாக நினைப்பு

wpengine

மன்னார் கிராம் சேவையாளர் கொலை! 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

wpengine

அமைச்சர் றிசாத்தை மக்கள் சேவகனாக நாங்கள் பார்க்கின்றோம்! உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள்

wpengine