நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த விபத்தில் சிக்கியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த வாகன விபத்தில் சிக்கியுள்ளார்.

குருனாகல் யந்தம்பலாவ பிரதேசத்தில் இன்று இந்த விபத்து நடந்துள்ளது.

சனத் நிஷாந்த பயணித்த கப் வண்டி வீதியை விட்டு விலகி பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் மோதியுள்ளது.

சம்பவத்தில் மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் குருனாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சனத் நிஷாந்த, மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares