பிரதான செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கை பார்க்க சென்ற பெண்ணுக்கு நடந்த பரிதாபம்

திருகோணமலை – தம்பலகாமம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் பிரதேச சபை பெண் உறுப்பினர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.


குறித்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கை சந்திப்பதற்காக முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து நேர்ந்துள்ளது.

படுகாயமடைந்தவர் தம்பலகாமம் பிரதேச சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெண் உறுப்பினர் எஸ்.பரீதா என தெரியவந்துள்ளது.

வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையினாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதெனவும், விபத்தில் காயமடைந்தவர் திருகோணமலை பொது வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலாகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சிங்கள ஊடகங்கள் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை கேள்வி குறியாக்கி! றிஷாட்டை விமர்சனம் செய்கின்றது.

wpengine

வெள்ளத்தால் பாதிப்புற்றோருக்கு சதொச மூலம் அத்தியாவசிய பொருட்கள் றிஷாட் நடவடிக்கை

wpengine

அவசர நிலமையின் போது அழைப்பதற்கு புதிய இலக்கம் 117 அறிமுகம்

wpengine