பிரதான செய்திகள்

நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை 100 ரூபாயினால் குறைகிறது!

இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை குறைக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதன்படி, குறித்த எரிவாயுவின் விலை சுமார் 100 ரூபாவினால் குறைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை  1005 ரூபாவால் குறைக்கப்பட்டது.

இந்தநிலையில் குறித்த எரிவாயு கொள்கலன் தற்போது 3,738 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.  இன்று நள்ளிரவு முதல் இந்த நிலையில், மாற்றம் ஏற்படும் என்று லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

Related posts

வரட்சி உலர் உணவு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை

wpengine

அந்-நஜா இளைஞர் கழக உறுப்பினர்களின் ஏற்பாட்டில் இப்தார் (படம்)

wpengine

மட்டக்களப்பு முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குடிநீரை வழங்க முடியவில்லை

wpengine