உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

நளினிக்கு தங்குவதற்கு யாரும் வீடு தரவில்லை

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும், நளினி நேற்று பரோலில் வெளியில் வந்தார்.


எனினும், பரோலில் வெளிவந்த நளினிக்கு தங்குவதற்கு யாரும் வீடு தரவில்லை என தமிழக முன்னணி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,
“ராஜீவ் காந்தி கொலையில் சிறையில் உள்ள ஏழுபேரை விடுதலை செய்யக்கோரி எத்தனையோ போராட்டங்களை யார் யாரோ நடத்தினார்கள்.

நளினி தனது மகள் திருமணத்துக்காக பரோல் கேட்டு மறுக்கப்பட்டபோது கடுமையாக விமர்சித்தார்கள். விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் என்று சீமான் உள்ளிட்ட பல அமைப்புகள் மார்தட்டிக் கொண்டிருக்கின்றன.

எனினும், தனது மகள் திருமணத்தை நடத்த பரோலில் வெளிவந்த நளினிக்கு தங்குவதற்கு யாரும் வீடு தரவில்லை.
தமிழ் தேசியம் பேசும் அமைப்புகளில் சுப.வீரபாண்டியன் தலைமையிலான திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணைப் பொதுச்செயலாளர் சிங்கராயர் மட்டுமே தனது வீட்டில் தங்கி திருமண வேலைகளை செய்ய நளினிக்கு உதவியிருக்கிறார்.

இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. சிங்கராயருக்கு சுப.வீரபாண்டியன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்” என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சுதந்திரக் கட்சியை கைப்பற்றும் தேவை மொட்டுக்கு இல்லை

wpengine

33வருட கால புலிகளின் போராட்டத்தை தோற்கடித்த மஹிந்த

wpengine

உலமாக்கள் தமக்குக் கிடைக்கும் பொறுப்புக்களை அமானிதமாகப் பயன்படுத்த வேண்டும் -அமைச்சர் றிசாட்

wpengine