பிரதான செய்திகள்

நம்மை நாம் மீள்பரிசீலனை செய்தாலே வெற்றி இலக்கை பெற்றுக்கொள்ளலாம் – தொழிலதிபர் எம்.எச்.எம்.தாஜுதீன்

பாறுக் ஷிஹான்
மாதம் தோறும்  நம்மை நாம்  மீள்பரிசீலனை செய்து சீர்தூக்கி பார்க்கும் போது தானாகவே  வெற்றி இலக்கை  விரைவாக பெற்றுக்கொள்ளலாம் என தனியாள் ஆளுமையினால் முன்னேறிய  பிரபல தொழிலதிபரும் மருதமுனை வர்த்தக சங்கத்தின் பொருளாளரும் சறோ நிறுவனப்பணிப்பாளருமான எம்.எச்.எம்.தாஜுதீன்  தெரிவித்துள்ளார்.

மருதமுனை சம்ஸ் மத்திய கல்லூரியில் நேற்று(2) தனியாள் விருத்தி தொழில் மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் தொடர்பான கருத்தரங்கு   நிகழ்வில்  கௌரவ அதிதியாக  கலந்து கொண்டு  மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது உரையில் தெரிவித்ததாவது

 நிறுவனத்தின் வெற்றிக்கு பிரதான காரணமே நான் எனது நிறுவனம் எவ்விடத்தில் இருக்கின்றது என்பதை ஆகக்குறைந்தது ஒரு மாதத்திற்கு ஒருமுறையாவது மீள்பரிசோதனை செய்து கொண்டு அதில் வரும் சவால்களை எதிர்கொள்வதாகும்.

இவ்வாறு தொடர்ந்து விடாமுயற்சியுடன்  நமது கடமையை மேற்கொண்டோமானால்  வெற்றி கனியை  நாம் பெற முடியும்.

ஒரு  நிறுவன முன்னேற்றத்தில் எவ்வாறான   அணுகுமுறைகள்  பின்பற்றப்படுகின்றனவோ கல்வியிலும் அவ்வாறே அவ்வணுகுமுறைகளை பின்பற்றப்படுவதை காண முடிகிறது.

வியாபாரத்துறை  கல்வி துறை ஆகியவற்றில்    சுயபரிசோதனை செய்த அனைவரும் சமூகத்தில் பிரபல மனிதர்களாக இருப்பதை நாம் காண முடியும்.வியாபாரம் செய்வது இலாபம் என்ற இலக்கை அடைவதற்காக என்பது போன்று கல்வியை கற்று உயர்ந்த மதிப்புள்ள இடத்தில் இருப்பதற்கு அவற்றை முறையாக கற்க வேண்டும். வியாபாரம் ஒன்றை ஆரம்பிக்க எவ்வாறான பொருள் பெறுமதியோ அவ்வாறு தான்   கல்வி சார்ந்த  பாடத்திற்கும் பெறுமதி உள்ளது .அந்த பெறுமதியை நாம்   இனங்கண்டு கற்க  வேண்டும். அதுமட்டுமற்p வியாபாரத்திற்கென பொருத்தமான இடத்தை தெரிவு செய்கின்ற மாதிரி கல்வி கற்பதற்கும்   பொருத்தமான இடம் ஒன்றினை மாணவர்களாகிய ஒவ்வொருவரும் இனங்காண்பது அவசியமாகும்.அதற்காக தான் எமது ஆசிரியர்கள் உங்களோடு இருக்கிறார்கள்.தம்மை அர்ப்பணிக்கின்றார்கள்.அவர்களின் ஆதரவுடன் எமது மாணவர்கள் கல்வியில் அதி உச்சத்தினை அடைய முடியும் அவ்வாறு தான் எங்கள் வியாபாரமும் .அரசாங்கம்  ஆதரவு தருவதனால் தான் மென்மேலும் எம்மால் முன்னெற முடிகிறது.

இவ்வாறே  நாம் கவ்வியில்   தோல்வி  அடைவதற்கும் வியாபாரத்தில்  நட்டம் அடைவதற்கும் எமது  சூழலும் அலட்சியமும் பிரதான மூல  காரணமாக அமைகின்றது.

அதில் சூழல் மாறும் போது அதற்கான முகாமைத்துவத்தினை கற்க வேண்டும்.அப்போது தான் கல்வி துறை வியாபாரம் சிறப்பாக மேற்கொள்ளலாம்.அடுத்து அலட்சியமான  நிர்வாகத்த திறமை இருப்பதனால்  வியாபாரத்தில் எவ்வாறு நட்டம் ஏற்படுமோ அவ்வாறு  கல்வியிலும் ஆர்வமின்மை பிற்காலத்தில் பின்தங்கிய நிலைய ஏற்படுத்த காரணமாக அமைகிறது.

எனவே போட்டி உள்ள இவ்வுலகில் அதற்கான சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டும்.அந்த சவால்களை முறியடித்து எதிர்நீச்சல் போட நாம் ஒவ்வொருவரும் முன்வருவதன் ஊடாக  தான் வெற்றி கனியை நாம் சுவைக்க முடியும் என கூறி மாணவர்களுக்கு ஒரு  சிறுகதை ஒன்றினை கூறி   ஊக்கப்படுத்தினார்.

நிகழ்வுகளில்  அலிஷ் கலை ஊடக இலக்கிய சமூக சேவை  வலையமைப்பின் தலைவர் ஜெஸ்மி எம்.மூஸா  இந்திய சக்ஸஸ் மாந்த்ரா நிறுவனப் பணிப்பாளர் சரவணன் தியாகராஜன் இந்திய குறும்பட இயக்குனர் கவிஞர் மணி கிருஷ்ணா மருதமுனை ஹேன் லூம் சிற்றியின் முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.ஜெமீல் ஆகியோர்  அதிதிகளாகக் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களைப்  இந்நிகழ்வின் தெரிவித்திருந்தனர்.

 

Related posts

அதிபர்களுக்கு மேலும் பல பொறுப்புகளை வழங்கிய கல்வி அமைச்சு

wpengine

பதிவாளர் நியமனத்தை வழங்கி வைத்த பிரதமர்! வத்தளை பதிவாளர் நியமனம்

wpengine

எதிர்க்கட்சிகளை பிளவுப்படுத்தும் சிறப்பான திறமையானவர் மஹிந்த

wpengine