பிரதான செய்திகள்விளையாட்டு

நண்பனுக்காக திருமண திகதியினை மாற்றிய இர்பான் பதான்

இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தனது நெருங்கிய நண்பன் உத்தப்பாவுக்காக தனது திருமண திகதியை மாற்றியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் உத்தப்பாவும், இர்பான் பதானும் மிகவும் நெங்கிய நண்பர்கள். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற உத்தப்பா, இர்பான் பதானுடனான நட்பு பற்றி பேசியுள்ளார்.

இது பற்றி அவர் கூறுகையில், எனக்கு திருமணம் ஆகப் போகிறது என்று நான் இர்பானிடம் கூறினேன். அதற்கு அவரும் தனக்கு திருமணம் ஆகப் போவதாக கூறினார்.

என் திருமண நாள் அன்று நீ என் அருகிலேயே இருக்க வேண்டும். அதனால் ஒரே திகதியில் நாம் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என இர்பானிடம் கேட்டுக் கொண்டேன்.

என் திருமண திகதி நிச்சயமானதும் நான் இதை தெரிவித்தேன். உடனே அவர் தனது திருமண திகதியை என் திருமணத்திற்கு முன்பு மாற்றிக் கொண்டார்.

நாங்கள் இருவரும் மிகவும் நெருக்கமானவர்கள். கிட்டதட்ட கணவன் மனைவி போல, இதை தான் மற்றவர்களும் கூறுவார்கள் என கூறி கலகலவென சிரித்தார் உத்தப்பா.

Related posts

மெக்சிகோவில் நிலநடுக்கம்! 119பேர் வரை பலி

wpengine

பால் மாவின் விலையை மேலும் குறைக்க தீர்மானம்!

Editor

ஊழியர்களுக்கு EPF வழங்காத 22,450 நிறுவனங்கள் அடையாளம்! – தொழில் அமைச்சு தெரிவிப்பு .

Maash