நடிகை அனுபமா பரமேஸ்வரன் மன அழுத்தத்தில் இருக்கிறார்.

‘பிரேமம்’ புகழ் மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் மன அழுத்தத்தில் இருக்கிறார்.  அவர் ஆசையாக வளர்த்து வந்த இரண்டு நாய்கள் ஒரு வார கால இடைவெளியில் அடுத்ததடுத்து இறந்ததுதான் அதற்கு காரணமாம்.

மூன்று நாய்களை தெருவில் இருந்து எடுத்து வளர்த்து வந்தார் அனுபமா. விஸ்கி, ரம் மற்று டோடி (கள்ளு) என மதுபான பெயர்களில் அவைகளுக்கு பெயர் வைத்து கால்நடை மருத்துவமனை மூலம் நோய் தடுப்பு மருந்துகளையும் முறையாக கொடுத்திருந்தார்.

ஆனாலும் தற்போது ரம் மற்றும் டோடி என இரண்டு நாய்களும் நோய் தாக்கி அடுத்ததடுத்து இறந்துவிட்டன.

இதனால் மன அழுத்தத்தில் இருப்பதாக  கூறியுள்ள அனுபமா, “தற்போது விஸ்கி மட்டும் தான் இருக்கிறது. செல்லப்பிராணிகளுக்கு கூட நோய் வரும் என நான் எதிர்பார்க்கவில்லை. அதனால் உங்களது வீட்டில் உள்ள செல்லப்பிராணிகளை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்” என்றும கேட்டுக்கொண்டுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares