செய்திகள்பிரதான செய்திகள்

நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்துள்ளனர்.

இலங்கை வந்துள்ள தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா ஆகியோர் இன்று (19) வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்துள்ளனர்.

இலங்கையிலுள்ள சுற்றுலாத் தலங்கள் மற்றும் இலங்கையின் வளமான கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் திரைப்பட தயாரிப்பு மற்றும் இசை நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

“இந்த முயற்சிகள் இலங்கையின் திரைப்பட சுற்றுலாவை மேம்படுத்தவும், எமது வளமான கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்தவும் உதவும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

இதனூடாக , நாட்டின் அழகிய நிலப்பரப்புகள் மற்றும் வரலாற்று சின்னங்களை உலகளாவிய படைப்பு முயற்சிகளுக்கான பின்னணியாகப் பயன்படுத்த முடியும் எனவும் சுற்றுலா துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

Related posts

விக்னேஸ்வரனுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் வவுனியாவில்! பொதுபல சேனா

wpengine

தலிபான் இயக்கத்தின் புதிய தலைவராக முல்லா ஹைபத்துல்லா

wpengine

கண்டி நோக்கி பயணம் செய்யும் அமைச்சர் றிஷாட்

wpengine