நச்சுத்தன்மையற்ற நாடு! ரத்தன தேரர் -அமைச்சர் சம்பிக்க ரணவக்க முறுகல்

ஜனாதிபதியின் மேற்பார்வையின் கீழ் இயங்கி வரும் ‘வச விசென் தொர ரட்டக்’ –நச்சுத்தன்மையற்ற நாடு எனும் தொனிப்பொருளிலான வேலைத்திட்டம் தொடர்பாக ரத்தன தேரர் மற்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோருக்கிடையே அண்மையில் முறுகல் நிலைதோன்றியது.

இது தற்போது கபினட் அமைச்சரவை வரை பாரதூரமாக சென்றுள்ளதாக அரச தகவல்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சர்ச்சைக்கு பிரதான காரணமாக அமைந்திருப்பது நச்சுத்தன்மையற்ற நாடு எனும்வேலைத்திட்டத்திற்கு ஹைப்ரிட் எனும் வகையான பசளை தொடர்பான யோசனையொன்று அமைச்சர் சம்பிக்கவினால் கபினட் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டமையாகும் எனதெரிவிக்கப்படுகிறது.

இவ்வேலைத்திட்டமானது இதற்கு முன்னும் சம்பிக்க ரணவக்க சூழல் பாதுகாப்பு அமைச்சராக இருந்த சந்தர்ப்பத்தில் ‘பிலிசரு’ எனும் வேலைத் திட்டத்திற்காக கொண்டு வரப்பட்ட யோசனையாகவும் கூறப்படுகிறது.

இவ் வேலைத்திட்டத்திற்கு அமைவாக கொம்போஸ் வகையான பசளைகளுக்குரிய தரத்திலான தயாரிப்பு முறை இன்று வரை அசாத்தியமாகி உள்ளதாகவும், குறித்த இப் பசளைக்கு ஏற்ற அளவிலான இரசாயனப் பசளைகளை சேர்த்து ‘ஹைப்ரிட்’ எனும் புதிய பெயரில் பசளை வகையொன்றை தயாரிப்பதே நோக்கமாகக் கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டு வருகிறது.

ஆயினும், இவ்வேலைத்திட்டம் தொடர்பாக ரத்தன தேரர் தனது முழுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளதோடு, குறித்த வேலைத்திட்டமானது முழுமையாக நச்சுத்தன்மையற்ற வகையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares