பிரதான செய்திகள்

தோப்பூர் பாத்திமா முஸ்லிம் மகளீர் கல்லூரி விழிப்புணர்வு

ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் கல்வி அமைச்சினால் இவ்வாரம் தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்த வாரத்தினை முன்னிட்டு தோப்பூர் பாத்திமா முஸ்லிம் மகளீர் கல்லூரி மாணவிகளால் போதைப் பொருள் தடுப்பு தொடர்பானவிழிப்புணர்வு  வீதி ஊர்வலம் இன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது வியாபாரிகள், பொதுமக்களுக்கு போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் தீங்குகள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் செயற்பாடுகளும் இடம்பெற்றுள்ளன.

குறித்த செயற்திட்டத்தில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

இலங்கையில் கூகுள் வரைப்படத்தில் (Google Maps) பாதை படம் (Street view)

wpengine

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor

சாணக்கியன் உள்ளிட்ட குழுவினருக்கு நீதி மன்ற அவமதிப்பு வழங்கு

wpengine