பிரதான செய்திகள்

தோனாவின் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

கிழக்கு மாகாண சபை நிதி ஒதுக்கீட்டின்கீழ் காத்தான்குடி சின்னத்தோனாவினுடைய புரமைப்பு பணிகள் மிகவும் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப் புனரமைப்பு பணிகளை பாரவையிடுவதற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் நகரசபை தொழில்நுட்ப உத்தியோகத்தருடன் 2016.10.05ஆந்திகதி கள விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இதன்போது அங்கு புனரமைப்பு பணிகளில் ஈடுபடும் கொந்துராத்து உரிமையாளரை சந்தித்து தொடர்ச்சியான புனரமைப்பு பணிகளுக்கான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், இத்தோனா ஊடறுத்துச் செல்லும் பொது மக்களினுடைய வீட்டு உரிமையாளர்களையும் சந்தித்து புனரமைப்பு பணிகளின் பின்னர் தமது காணிகளினூடாக செல்லும் தோனாவின் பகுதிகளினூடாக போக்குவரத்து மேற்கொள்வது மற்றும் எதிர்கால தேவைகளுக்காக கட்டடங்களை அமைப்பது என்பது தொடர்பான அறிவுரைகளையும் வழங்கினார்.unnamed-3

மேலும் தோனாவின் புனரமைப்பு பணிகளுக்காக உடைக்கப்பட்ட பொது மக்களின் வீட்டு சுவர்களை தோனாவினுடைய கொந்துராத்து நிதியிலிருந்து கட்டி கொடுப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளார் ஷிப்லி பாறூக் வழங்கிய வாக்குறுதிக்கமைவாக தற்போது உடைக்கப்பட்ட சுவர்களை மீளக் கட்டும் பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.    unnamed-2

Related posts

மன்னார் நகர சபையின் 2020ஆம் ஆண்டிற்கான வரவு

wpengine

ஜோதிடத்தை நம்பி அரசியலில் இறங்கும் பிரபலங்கள்

wpengine

“ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்

wpengine